Skip to content

திமுக மிரட்டலுக்கு பயந்த கட்சியா?… கரூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

  • by Authour

கரூர் முப்பெரும் விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்புரை:

2019 இல் இருந்து இன்றுவரை வெற்றி பெற்றுள்ளோம் சாதாரண வெற்றி இல்ல மிக பிரம்மாண்டமான வெற்றி 2026லும் வெற்றி தொடரும்.

இந்தியாவில் ஆயிரக்கணக்கான அரசியல் இயக்கங்கள் உள்ளது எந்த இயக்கத்திலும் உங்களை மாதிரி தொண்டர்கள் இருந்ததில்லை கலகம் நம்பலை காட்டுகிறது நமக்காக அந்த கழகத்தைக் காப்போம் என்று நீங்கள் உழைக்கிறீர்கள் உங்களுக்கு தலைமையாக இருப்பது நான் பெற்ற பெருமை திமுகவை அழிப்போம் ஒழிப்போம் என்று சொன்னார்கள் இப்பவும் கூட சில பேர் பேசி வருகின்றனர் திமுகவை அழிப்போம் என்று சொன்னவர்கள் அனைவரும் மறைந்து விட்டார்கள் என நடிகர் விஜய் மறைமுகமாக விமர்சனம் செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.

டெல்லிக்கு கேட்கும் அளவிற்கு அனைவரும் சத்தமாக சொல்லுங்கள் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு.

தமிழ்நாட்டிற்கு இடையூறு செய்யும் கொள்கை காவி கொள்கை அதற்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் போராடிக் கொண்டிருக்கிறது பாஜக ஒன்றிய பாஜக அரசுடன் தொடர்ந்து போராடி வருகிறோம் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி என்ன பேசி உள்ளார் எனது அதிமுக ஆட்சியில் காப்பாற்றினது பாஜக தான் என்று கூறியுள்ளார்.

அந்த கைப்பாவை அரசை தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறிய

திமுக தான் காரணம் என்று பாஜகவினர் நம் மீது வன்மத்துடன் இருக்கின்றனர்‌

அதனால்தான் நமக்கு தொடர்ந்து இடையூறு கொடுத்து வருகின்றனர்.

திமுக மிரட்டலுக்கு பயந்த கட்சியா இந்தியாவில் மாநில கட்சி ஆட்சி பிடித்த வரலாறு நாம் 74 ஆண்டு கால வரலாறு இருக்கிறது தமிழ்நாட்டில் வந்த அனைத்து கட்சிகளும் திமுகவை அழிப்போம் ஒழிப்போம் என்று சொன்னார்கள் இப்பவும் கூட சில பேர் பேசி வருகின்றனர்

திமுகவிற்கு நாங்க தான் மாற்றம் என்று சிலர் பேசி வருகின்றனர் என்ன மாற்றப் போறாங்க தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியை மாற்றி பின்னோக்கி செல்ல போகிறார்களா ?

திமுகவை மாற்றம் என்று சொன்னவர்கள் அனைவரும் மறைந்து விட்டார்கள்

நமக்கு துணையாக பெரியார் அண்ணா கலைஞர் அவர்களுடைய உணர்வு நம்முடைய இருக்கிறது

இதே உறுதியோடு போராடவும் நாம் முன்னெடுக்கும் போராட்டம் கட்சிக்கான போராட்டமும் முதலமைச்சர் பொறுப்புக்கான போராட்டமும் ஆட்சி அதிகாரத்திற்கான போராட்டமும் அல்ல தமிழ்நாட்டிற்கான போராட்டம் இதற்கு தமிழ்நாடு முதல் முழுவதும் ஓரணியில் திரள வேண்டும் தமிழ்நாட்டை தலைகுனியை விட மாட்டேன் டெல்லிக்கு இப்ப கேட்கும் அளவுக்கு அனைவரும் சத்தமாக சொல்லவும்.

தமிழ்நாட்டை தலைகுனியை விடமாட்டோம் என்று சத்தமாக சொல்லுங்கள்.

தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்

விடை பெறுவதற்கு முன்பாக அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் மிகத் தொலைவிலிருந்து அனைவரும் வந்துள்ளீர்கள் மழை பெய்து கொண்டிருக்கிறது அனைவரும் பத்திரமாக செல்லுங்கள் என கூறினார்.

error: Content is protected !!