திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரம்மாண்ட மாநில மாநாடு மார்ச் 8-ந் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற உள்ளது. திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்கிற தலைப்பில் மாநாடு மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
திருச்சி சிறுகனூரில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். தற்போது இதற்கான பிரம்மாண்ட மேடை பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டம் சிறுகனூரில் பகுதியில் பரந்து விரிந்த பரப்பளவில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் இரவும்

பகலாக நடைபெற்று வருகின்றன. கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான
மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், 10 லட்சத்துக்கும் மேல் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்வதற்கான முக்கியத் தீர்மானங்கள் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது..
திருச்சி மாவட்டத்தின் ‘சென்டிமென்ட்’ வெற்றியை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், நிர்வாகிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளைத் தலைமை வழங்கியுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பல லட்சக்கணக்கான தொண்டர்கள் திரள உள்ளதால், அவர்களுக்கான உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுப்பதில் அமைச்சர் கே.என் நேரு மும்முரமாக ஈடுபட்டுள்ளர்.
இந்தநிலையில் மாநாட்டு திடலை கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே என் நேரு ஆய்வு மேற்கொண்டார்.பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

