புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் திறக்கப்பட்டது.
கலைஞர் அறிவாலயம் என பெயரிடப்பட்ட புதிய அலுவலகத்தை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். இந்நிகழ்வில் மாநில திமுக. மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி, ஒன்றிய செயலாளர்கள் பொன். ராமலிஙகம், இளையராஜா, பேரூராட்சி தலைவர் மாரிக்கண்னு முத்துக்குமார், முத்துக்குமார், நகரம் நாசர், ஒன்றிய துணைச் செயலாளர் முன்னாள் சேர்மன் மேகலா முத்து, மெடிக்கல் குமார் உள்ளிட்ட ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

