Skip to content

பிப்ரவரி 7-ல் விருதுநகரில் திமுக இளைஞர் அணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு

திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 4:00 மணி அளவில், விருதுநகர் ‘கலைஞர் திடலில்’ மாபெரும் “தென் மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு” நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து, தற்போது தென் மண்டலத்திற்கான இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியானது, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதலமைச்சரும் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறுகிறது. இதில் தென்மண்டலத்தைச் சேர்ந்த 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி மற்றும் கிளை அளவிலான ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து பங்கேற்க உள்ளனர். இதற்கான வரவேற்புரையை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குகிறார்.

இந்தச் சந்திப்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். தென்மண்டல நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்து வரும் பொறுப்பை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தின் நிறைவாக இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா நன்றியுரை ஆற்றுகிறார்.

error: Content is protected !!