Skip to content

திமுகவின் SIR வார் ரூம்… முதல்வர் அறிவுரை

  • by Authour

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள SIR வார் ரூமில் 08065420020 என்ற எண்ணில் நேற்று ஒரு நாள் மட்டும் 627 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன.

  1. 2002-ஆம் ஆண்டில் வாக்களித்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற்றி குடியேறியிருந்தால், வாக்குரிமை தற்போது எந்த இடத்தில் அமையும்?
  2. மனைவியின் வாக்குரிமை அவரது சொந்த ஊரில் உள்ளது. இப்போது உள்ள முகவரி ஆதாரமாக ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை என்ற இரண்டு ஆவணங்கள் மட்டுமே உள்ளன. இவை மட்டும் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ள முடியுமா?
  3. படிவத்தில் உறவினர் குறித்து தகவல் கட்டாயம் நிரப்ப வேண்டுமா?
  4. 2024 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது. தற்போது பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
  5. குடும்பத்தில் எவரேனும் வெளிநாட்டில் வேலையில் இருந்தால் அவருடைய படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது?
  6. பெற்றோர் 2002 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
  7. கணக்கீட்டு படிவத்தில் தகவல்களை தவறாக பதிவிட்டால் மீண்டும் புதிய படிவம் வழங்கப்படுமா?
  8. BLOக்கள் படிவத்தை பூர்த்தி செய்ய உதவுவதில்லை. இதனால் படிவத்தை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரிசெய்வது?

என மக்களிடம் உள்ள பல கேள்விகளை பரிசீலித்து,
குழப்பங்களயும், சந்தேகங்களையும் தீர்க்க நடவடிக்கைளை மேற்கொள்ளும்படி தேர்தல் ஆணையத்தை திமுக சட்டத்துறை சார்பில் அணுகிட மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பியிடம் முதலமைச்சர் அறிவுறுத்தல்.

error: Content is protected !!