Skip to content

உலகளவில் சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட வசூல் எவ்வளவு தெரியுமா…?

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியானது. பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் – சூர்யா இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.

 முன்னதாக வெளியான படத்தின் பாடல்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று படம் வெளியாக கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.  ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் முதல் நாள் ரூ.17.75 கோடியை வசூலித்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகளவில் 46 கோடி ரூபாய்  வசூலை ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
error: Content is protected !!