கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட நாவமலை குடியிருப்பு பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சரக்கு வாகனத்தில் (தோஸ்த்) கூலி வேலைக்காக காட்டம்பட்டி நோக்கி செல்லும் பொழுது வால்பாறை சாலையில் சின்னார்பதி இடத்தில் சரக்கு வாகனம் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 19பேர் படுகாயம் அடைந்தனர் சம்பவ இடத்தில் ராணி என்ற பெண் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திலகராஜ் என்பவர் உயிரிழப்பு மேல் சிகிச்சைக்கு சஞ்சய், மணி, மாங்கரை மூவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மீதமுள்ள 16 பேர் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஆழியார்
காவல் நிலைய போலீசார் கூறுகையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான திருமூர்த்தி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து உள்ளதால் அதிக அளவில் செடிகள் முளைத்துள்ளது கடந்த நான்கு நாட்களாக செடிகளை அகற்ற நவமலை பகுதியில் இருந்து மலைவாழ் மக்கள் வேலைக்கு சென்று வருகின்றனர் இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற மழை வாழ் மக்கள் அதேப் பகுதி சேர்ந்த பாலு என்பவர் தோஸ்த் வாகனத்தை இயக்கி உள்ளார் சின்னார் பதி என்ற இடத்தில் வளைவில் திரும்பும் பொழுது எதிர்பாராத வாகனம் கட்டுப்பட்டு இழந்து விபத்து ஏற்பட்டது என தெரிவித்தனர் .