புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காமராஜர்புரத்தை சேர்ந்த காத்தமுத்து என்பவரது மகன்கள் கண்ணன்(38), இவரது தம்பி கார்த்திக்(30), இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டு அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் அண்ணன், தம்பி இருவரையும் சரமாரி வெட்டினர். இதில் இருவரும் அந்த இடத்திலேயே இறந்தனர்.
தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் அங்கு வந்து சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலையாளிகளை தேடி வருகிறார்கள். கண்ணனும், கார்த்திக்கும் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வியாபாரம் செய்து வந்தார்களாம். இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
கொலையாளிகளை கைது செய்யக்கோரி கண்ணனின் உறவினர்கள் அங்கு சாலை மறியல் நடததினர். இதனால் அங்கு நிலைமை பதற்றமாக உள்ளது.