இந்தியாவின் முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இவர் புதுக்கோட்டையில் 30 ஜூலை 1886ல் பிறந்தார். இவர் சென்னை மருத்துவ கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார். பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். பெண்களுக்கான மருத்துவமனையை நிறுவினார். பத்மபூஷன் விருது பெற்றவர். 1968 ஜூலை 22ல் மறைந்தார்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சீர்திருத்தங்களை இந்த தலைமுறையினர் அறியும் வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு அரசு சார்பில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இன்று முத்துலட்சுமி ரெ்டியின் பிறந்தநாள் என்பதால், அவரது சிலைக்கு அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், கலெக்டர் அருணா , மேயர் திலகவதி செந்தில், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் கள் வை.முத்துராஜா,எம்.சின்னத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா,மாவட்ட ஊராட்சிமுன்னாள் துணை த்தலைவர் த.சந்திரசேகரன், வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பெ.ராஜேஸ்வரி,ஒன்றிய திமுக செயலாளர் மு.க.ராமகிருஷ்ணன்,முன்னாள் நகரதிமுகசெயலாளர்க.நைனாமுகம்மது ,தெற்கு மாநகர செயலாளர்ராஜேஸ்,மற்றும் திமுக நிர்வாகிகள் எம்.எம்.பாலு,மணியம் பள்ளம் சுப்பிரமணியன் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டு முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.