Skip to content

தந்தை, மகன் மோதல் முற்றியது: ராமதாசும் தேர்தல் ஆணையத்தில் மனு

  • by Authour

  புதுச்சேரியில் கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம்  நடந்த பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்ட மேடையில் ராமதாஸ்- அன்புமணி இடையே பகிரங்கமாக  மோதல்  வெடித்தது. அந்த மோதல்  இதுவரையிலும் முடிவுக்கு வரவில்லை. தந்தை, மகன் மாறிமாறி குற்றச்சாட்டுகளை கூறியதால் மூத்த நிர்வாகிகள் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனால் பாமக இரண்டாக பிளவுபட்டுள்ளது. கட்சிக்கு யார் தலைவர்,  வேட்பாளர்களுக்கு ஏ.பி. ஆவணங்களில் கையெழுத்திடும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதை  முடிவு செய்ய இப்போது இருவரும் களத்தில் குதித்துள்ளனர்.

மொத்த்தில் கட்சியை அதிகாரப்பூர்வமாக , சட்டப்படி கைப்பற்ற இருவரும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

 

ஏற்கனவே அன்புமணி டெல்லி சென்று, பாஜ மேலிட தலைவர்களை சந்தித்ததோடு இந்திய தேர்தல் ஆணையத்தையும் சந்தித்து பாமகவுக்கு பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான்தான், புதிய தலைவர் பொதுக்குழுவால் தேர்வாகும்வரை தனக்கே அதிகாரம் என குறிப்பிட்டு மாம்பழம் சின்னத்துக்கான உரிமையை கோரி உள்ளதாக  கூறப்படுகிறது.

 

 

 

அன்புமணியின் இத்தகைய செயல்பாடுகளால் கடும் விரக்தியடைந்த ராமதாஸ், அவரது பெயரையே பாமகவினர் யாரும் உச்சரிக்க கூடாது என கண்டிப்புடன் கூறியதோடு கட்சியினருக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். படிப்படியாக அவரை கட்சியிலிருந்து நீக்கும் முடிவுக்கும் ராமதாஸ்  வந்து விட்டார்.

ராமதாஸ் சார்பிலும்,  இந்திய தேர்தல் கமிஷனிடம் ஒரு மனு கொடுத்துள்னர். அதில் பாமகவின் தலைவராக இருக்கும் அன்புமணி சரியாக செயல்படாததால் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட் டோம் .  கட்சி நிறுவனரான நானே தற்போது கட்சி தலைவராகவும் தொடர்கிறேன். எனவே எனது தலைமையிலான பாமகவுக்கே கட்சி சின்னத்தை ஒதுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த மாற்றம் சம்பந்தமாக 1413 செயற்குழு உறுப்பினர்கள், 21 தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்த ஆவணங்களையும் அவர் சமர்பித்துள்ளார். ராமதாசின் தனி செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் உள்ள சாமிநாதன்தான் டெல்லியில் ராமதாஸ் சார்பில் தேர்தல் கமிஷனில் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் இதற்கு முன்பு ஒன்றிய அமைச்சராக இருந்த அன்புமணியிடம் தனி செயலராக இருந்ததால் அவர் மூலமாகவே டெல்லியில் காய் நகர்த்தி உள்ளார். இதனால் இந்திய தேர்தல் ஆணையம் யாருடைய மனுவை ஏற்கும், மாம்பழ சின்னம் யாருக்கு செல்லும் என்ற பரபரப்பு பாமகவில் எழுந்துள்ளது. கட்சியின் அங்கீகாரம் தேர்தல் ஆணையத்தால் யாரிடம் செல்கிறதோ அதை வைத்துதான் பாமகவின் எதிர்காலம் குறித்து தெரியவரும் என அரசியல்  வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!