Skip to content

திருச்சியில் குடிநீர் வழங்கும் திட்டம்-அமைச்சர் மகேஸ் பார்வை

திருச்சி கம்பரசம்பேட்டை நீர்உந்து நிலையத்தில் ஆய்வு – பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

புதிதாக இணைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்துதல் திருச்சி மாநகராட்சியுடன் 2011ல் சேர்க்கப்பட்ட திருவெறும்பூர் பேரூராட்சி, பாப்பாகுறிச்சி ஊராட்சி, எல்லக்குடி ஊராட்சி, கீழகல்கண்டார் கோட்டை ஊராட்சி மற்றும் ஆலத்தூர் ஊராட்சி, ஆகிய பகுதிகள் அடங்கிய 5 பழைய வார்டு (61, 62, 63, 64 மற்றும் 65) பகுதிவாழ் பொதுமக்களுக்கு CPHEEOன் நெறிமுறைகளின்படி நாள் ஒன்றுக்கு, நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்குவதற்கு. ஜெர்மானிய வங்கி நிதி உதவியின் கீழ் ரூ.63.70 கோடி மதிப்பீட்டில் பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு,கீழ் காவேரி ஆற்றுப்படுகையில், புதிதாக 6.0மீ விட்டமுள்ள 18.0 மீ ஆழமுள்ள தலைமை நீர்சேகரிப்பு கிணறு கட்டப்பட்டுள்ளது.

மேற்படி நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண்.38, 39, 40, 41, 42, 43 ஆகிய பகுதிவாழ் பொதுமக்களுக்கு 27.27 MLD குடிநீர் வழங்கும் 38.00 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி- பாரி நகர் புகழ் நகர் ,எல்லக்குடி (பழையது) காவேரி நகர், சந்தோஷ் நகர் ,ஆலத்தூர் , கணேஷ் நகர், அம்பேத்கர் நகர்மற்றும் பழைய 3 எண்ணிக்கைகள் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளிலிருந்து குடிநீர் வழங்கும் வகையில் 211.711 கி.மீ குடிநீர் விநியோக குழாய்களும், 21.556 கி.மீ பிரதான குடிநீர் உந்துக் குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை இத்திட்டத்திற்கு ரூ.64.95 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 19343 வீட்டு குடியிருப்பு குடிநீர் இணைப்புகள் வழங்க வழிவகை செய்யப்பட்டு, 88054 மக்கள் பயன் பெறறுவார்கள்.

error: Content is protected !!