Skip to content

போலீஸ் ஸ்டேசன் முன்பு – டிரைவர் தீக்குளிக்க முயற்சி-திருச்சியில் பரபரப்பு

திருச்சி மாவட்டம் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு டிரைவர் விஜயன் என்பவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. முசிறி அருகே மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் விஜயன் என்பவர் மகள் தனுஷ்யா (17) கடந்த 3.4. 2025 அன்று காணாமல் போனது குறித்து முசிறி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்நிலையில் மகளை கண்டுபிடித்து தர தாமதம் ஏற்பட்டதால் விபரீத முடிவு எடுத்துள்ளார்.  விஜயன் தீக்குளிக்க முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர் மேலும் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
error: Content is protected !!