மயிலாடுதுறை மாவட்ட பஸ் நிலையத்தில் இருந்து பொறையார் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை கணேசன் என்ற டிரைவர் ஓட்டினார். ஆக்கூர் அருகே சென்றபோது, டிரைவர் கணேசனுக்கு எதிர்பாராத விதமாக திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் பஸ்சை ஓரமாக நிறுத்த முற்பட்டுள்ளார்.
ஆனால் பஸ் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்த சம்பவத்தில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 34 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். அதே சமயம் டிரைவர் கணேசனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

