Skip to content

போதை பொருட்கள் விற்பனை… வியாபாரி கைது.. திருச்சி க்ரைம்..

போதை பொருட்கள் கடத்தி விற்பனை.. -வியாபாரி கைது 

திருச்சி, ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் திருவானைக்காவல் சக்தி நகர் ட்ரங் ரோடு பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர் .அப்போது சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல், கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி விற்பனை செய்ய கொண்டு வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் இருந்து மேலும் இருசக்கர வாகனம், பணம், செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் கைக்குடி ரோடு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் (வயது 49) என்பது தெரியவந்தது. போலீசார் அவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

லாட்டரி விற்றவர் பணத்துடன் கைது …

திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகர் பொதுக்கழிப்பிடம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடியாக ரோந்து சென்று கண்காணித்தனர் .அப்போது லாட்டரி சீட்டுகள் விற்றதாக அரியமங்கலம் சீனிவாசன் நகரை சேர்ந்த சக்திவேல் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நடந்து சென்ற வாலிபரிடம் வழிப்பறி கொள்ளை

சென்னை வெங்கடேசபுரம் ஐந்தாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் அஜய் சபரி (வயது 27 ) .இவர் திருச்சியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு வந்தார்.என் நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள ராணுவ மைதானம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இவரிடமிருந்த ஆப்பிள் ஏர் பர்ட்ஸ் மற்றும் ஏ.டி.எம் கார்டு ஆகியவற்றை வழிப்பறி செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அஜய் சபரி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்.

error: Content is protected !!