வியாபாரி மனைவி பூச்சி மருந்து குடித்த சாவு…
திருச்சி கே.கே.நகர் பொன்னையா காலனி தேவராய நகரை சேர்ந்தவர் தம்பு ராங்கி. பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் ( 52)இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் மாரியம்மாள் சற்று மனநிலை சரியில்லாமல் அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாரியம்மாள் திடீரென்று பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை பொருட்கள் விற்ற வியாபாரி கைது
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட விமல், கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி பாண்டி தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் துணையுடன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது காந்தி மார்க்கெட் ஆர்ச் அருகில் போதை பொருட்கள் வைத்திருந்ததாக திருச்சி காட்டூரை சேர்ந்த நைனா முகமது என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் .அவரிடம் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
லாட்டரி சீட்டுகள் விற்ற வியாபாரி கைது… பணம் பறிமுதல்
திருச்சி உறையூர் டாக்கர் ரோடு பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து எஸ்ஐ நளினி தலைமையிலான போலீசார் டாக்கர் ரோடு பகுதியில் தீவிரமாக ரோந்து சென்று கண்காணித்தனர் .அப்போது லாட்டரி சீட்டுகள் விற்றதாக அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.