10ம் வகுப்பு மாணவன் தற்கொலை
திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் அரவானூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் ஸ்ரீநாத் (வயது 15) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் ஸ்ரீநாத் சரியாக படிக்காமல் இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று விட்டிற்கு வந்த ஸ்ரீநாத்யை சரியாக படிக்க மாட்டுகிறாய் என்று கூறி அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டின் அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் உடனடியாக உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய ஸ்ரீநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் ஆண் சடலம்..
திருச்சிஸ்ரீரங்கம் ரெங்கா ரெங்கா கோபுரம் அருகில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.அவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து திருவரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிறகு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் வெள்ளி முத்தம் கிராம நிர்வாக அதிகாரி பாரதிதாசன் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரெங்கா ரெங்கா கோபுரம் அருகில் இறந்து கிடந்த நபர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மயங்கி விழுந்தவர் ஒருவர் திடீர் சாவு..
திருச்சி கிராப்பட்டி சிறப்பு காவல் படை பாலம் அருகில் உள்ள பகுதியில் கிராப்பட்டி ரெயில்வே காலனி அண்ணாநகரை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 53) என்பவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி திடீரென்று இறந்து போனார்.இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடமலைப்பட்டி புதூர் சிறுவர் பூங்கா அருகில் பெண் சடலம்…
திருச்சி ஆக8 – திருச்சி பஞ்சப்பூர் பசுமை பூங்கா அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார் இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு இறந்த கிடந்த பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த பெண் யார் எ எந்த ஊரை சேர்ந்தவர்?என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது..
திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொன்மலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு வாலிபர்கள் போலீசார் வருவது பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர் இதனை அடுத்து போலீசார் அந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தபோது கிராப்பட்டி ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்த வடிவேல் ( 24) சுப்பிரமணியம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த வாசன் (வயது 23) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தபோது மேற்கண்ட இரண்டு வாலிபர்களும் போதை மாத்திரை விற்பனை செய்ய நின்று கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், பாட்டில், ஊசி மற்றும் டூவீலரை பறிமுதல் செய்துள்ளனர்.
காந்தி மார்க்கெட்டில் செல்போன் திருடிய சிறுவன் கைது..
திருச்சி தாரா நல்லூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் வயது 49 இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணாபுரம் முஸ்லிம் நடுத்தெருவில் நடந்த சென்று கொண்டிருந்தார் அப்பொழுது இரண்டு பேர் அவர் அருகில் வந்து செல்போனை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர் இது தொடர்பாக ரமேஷ் குமார் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார் புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை திருடிய கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர்.
பாலக்கரையில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்…
திருச்சி சங்கிலிண்டபுரம் எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் கதிர்வேல் வயது 27 இவர் ஆட்டோ டிரைவர்.கடந்த ஆறாம் தேதி கதிர்வேல் ஆட்டோவுடன் சென்று சங்கிலாண்டபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார் அப்பொழுது 3 வாலிபர்கள் ஆட்டோ அருகில் நின்று கொண்டிருந்தனர்.அப்பொழுது 3 பேர் சேர்ந்து ஆட்டோ டிரைவர் கதிர்வேலிடம் தகராறு செய்து ஆட்டோ கண்ணாடியை உடைத்துள்ளனர்.சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் கதிர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது இந்த சம்பவம் குறித்து கதிர்வேல் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.