மதுவுக்கு அடிமையானவர் சுருண்டு விழுந்து சாவு
திருச்சி தீரன் நகர் பெரியார் தந்தை பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் ( 58). இவருக்கு திருமணம் ஆகி 2மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.
ரங்கராஜனுக்கு மதுப்பழக்கம் இருந்தது இதற்கு அடிமையானதால் குடும்பத் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவரது மனைவி சியாமளா தேவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து சென்று விட்டார் .பின்னர் தனியாக வசித்து வந்த ரங்கராஜன் அளவுக்கு அதிகமான மது போதையில் மயங்கி கிடந்தார் அவரது சகோதரி திலகா அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலர் அளிக்காமல் ரெங்கராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சியாமளா தேவி கொடுத்த புகாரி அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
டூவீலரில் போதை மாத்திரைகள் கடத்தல்.. வாலிபர் கைது
திருச்சி பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் பொன்மலை சாய்பாபா கோவில் முன்பு திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர் அப்போது அதில் தடை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போதை மாத்திரை மற்றும் ஊசி மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பொன்மலை கீழ உடையார் தெரு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (23) என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து 100 மில்லி கிராம் எடை கொண்ட 48 போதை மாத்திரைகள், 2 ஊசிகள் போன்றவற்றை கைப்பற்றினர்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் தூங்கியவர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் எழில் நகர் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது பாரூக் ( 54). இவர் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட், வில்லியம்ஸ் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு சாலையோரம் படுத்து தூங்கினார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது ஏறி இறங்கியது இதில் இடுப்பில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் . இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறப்பு முகாமில் 4 பேர் கேட்டை நொறுக்கி ரகளை.. வழக்குப்பதிவு
திருச்சி மத்திய ஜெயில் வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கே பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட பலரும் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அடைக்கப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த இக் ஓஜர் இபுகா பிரான்சிஸ் (வயது 30 ), ஒயிடிலே பீட்டர் ( 427, ஓலிடே யூசுப் (30), ஒ க்பு ஜேம்ஸ் (27) ஆகியோர் சிறப்பு முகாம் மூணாவது இரும்பு கேட்டை கல் வீசி சேதப்படுத்தியதோடு அந்த கேட்டை குலுக்கி அங்குள்ள காவலர்களை பணி செய்ய விடாமல்
தடுத்து ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கொட்டப்பட்டு விலங்குகள் அகதிகள் மறுவாழ்வு மையத்தின் மண்டல சிறப்பு துணை
கலெக்டர் சந்தான லட்சுமி கே.கே. நகர் போலீஸில் புகார் செய்தார் அதன் பேரில் ரகலையில் ஈடுபட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

