Skip to content

மதுபோதையில் அதிவேக கார் விபத்து…3 பேர் படுகாயம்

கோவையில் இருந்து விமான நிலையம் நோக்கி சென்ற அதிவேக கார், வரதராஜா மில் பஸ் ஸ்டாப் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது புறம் உள்ள பக்கவாட்டு சுவற்றில் மோதி தூக்கி எறியப்பட்டது. அதன்பின், இடதுபுறமாக சாய்ந்த கார், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபரின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காரில் இருந்த இரண்டு நபர்களும், இருசக்கர வாகனத்தில் வந்த நபரும் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்த இருவரும் மதுபோதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதிவேகம் மற்றும் மதுபோதையே விபத்திற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!