Skip to content

மதுபோதையில் ராணுவவீரர் அலப்பறை .. போலீசாரை தள்ளியதால் கைது

நாட்றம்பள்ளி அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவவீரர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் அளபறி செய்துள்ளார் தட்டிகேட்ட போலீசாரின் செல்போனை பிடுங்கிவீசி போலீசாரை கீழே தள்ளியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பாச்சல் கிராமம் சின்னமூக்கனூர் பகுதியை சேர்ந்த சந்தனகுமார் என்பவரின் மகன் சிதம்பரம் (34) இவர் டில்லியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி விடுமுறையில் சொந்த ஊரான சின்ன மூக்கனூர் பகுதிக்கு வந்துள்ளார். அதனை தொடர்ந்து விடுமுறை முடிந்து 21/2/2025 தேதி அன்று மீண்டும் பணிக்கு செல்ல இருந்த நிலையில் 19ஆம் தேதி இரவு நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே ராணுவ வீரர் சிதம்பரம் அளவுக்கு அதிகமான மது போதையில் அங்கு செல்லும் பொது மக்களிடமும் டாஸ்மாக் கடைக்கு வரும் இளைஞர்களியிடமும் தகராறு செய்து அளபரியில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் இது தொடர்பாக பொதுமக்கள் நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ராணுவ வீரராக இருந்து கொண்டு நீங்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது எனவும் வீட்டிற்கு செல்லும்படி போலீஸார் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த ராணுவவீரர் என்ன செய்கிறோம் என தெரியாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசார் கையில் இருந்து போனை பிடுங்கி போலீசாரை கீழே தள்ளியுள்ளார்.

அதன்பின் நாட்றம்பள்ளி போலீசார் ராணுவவீரர் சிதம்பரத்தை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று அவர்மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் மீண்டும் பணிக்கு செல்ல இரண்டு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் அளவுக்கு அதிகமான மது போதையில் அளபரியில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!