துபாய் நாட்டில் தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம்(43), குடு (எ) முகமது ரபிக்(49) ஆகியோர் துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் வேலை செய்து வந்தனர்.
அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் கடந்த 15ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில்

இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து, இருவரது உடல்களும் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் இருவரின் உடல்களுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இருவரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்ட்டது.
தீயில் கருகி இறந்த இருவரது குடும்பத்துக்கும் ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.1 0லட்சம் வீதம் நிவாரணம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

