Skip to content

பறிமுதல் செய்த காரை… திருப்பி தரக்கோரி துல்கர் சல்மான் மனு

மலையாள நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு சொகுசு கார்கள், பூட்டானில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், ‘ஆப்ரேஷன் நும்கூர்’ சோதனையின் போது சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனை கேரளாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது, இதில் துல்கரின் கொச்சி இல்லத்தில் இருந்து ஒரு லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது தந்தை மம்மூட்டியின் பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது, ஆனால் அங்கு கார்கள் பறிமுதல் செய்யப்படவில்லை.

இப்பொது, பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் கரிப்பூர் விமான நிலையத்தில் உள்ள சுங்க அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் துல்கர் கார் வாங்கியதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சுங்கத்துறை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துல்கர் சல்மான் பறிமுதல் செய்யப்பட்ட கார்களை திருப்பி வழங்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சட்டத்திற்கு உட்பட்டு கார் வாங்கியதாகவும், சுங்க வரி செலுத்தி கார் வாங்கிய நிலையில், பறிமுதல் செய்த காரை திருப்பி தர உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் துல்கரின் சொகுசு கார் சேகரிப்பு மீதான ஆர்வத்தால் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.  அவரிடம் இருக்கும் கார் வரிசையில், ஃபெராரி 296 ஜிடிபி, மெர்சிடெஸ் பென்ஸ் ஏ.எம்.ஜி. ஏ 45, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர், மற்றும் பி.எம்.டபிள்யூ எம்3 இ46 போன்ற விலையுயர்ந்த கார்கள் உள்ளன.

error: Content is protected !!