தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் நெல் அரவை மில்லில் இருந்து தூசி தொடர்ந்து வெளியேறி வருவதால் குடியிருப்பு பகுதி மக்களுக்கு நோய் தொற்று பாதிக்கும் அபாயம்….*!
மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்……!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியில் தனியார் நெல் அரவை மில் இயங்கி வருகிறது.
இந்த அரவை மில்லில் இருந்து நீண்ட நாட்களாக தொடர்ந்து நெல் அரவையின் பொழுது மாசு படக்கூடிய தூசி வெளியேறி வருவதால் அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும்,
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும் , சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் பட்டுக்கோட்டை- மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

