திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குனிச்சி மோட்டூர் பகுதியில் மாபெரும் எருது விடும் திருவிழா ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த எருதுவிடும் திருவிழாவில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட எருது ஒன்று மந்தையில் திடீரென பல்டி அடித்து கீழே விழுந்தது. இதனால்
அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று எருது தூக்கி நிறுத்தினர் இதன் காரணமாக மந்தையில் பரபரப்பு காணப்பட்டது. மேலும் குறைந்த நொடியில் இலக்கை அடைந்த எருதுகளுக்கு முதல் பரிசு என 60-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் இந்த எருதுவிடும் திருவிழாவில் 50 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 20க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் இந்த எருதுவிடும் திருவிழாவில் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்..