Skip to content

டெல்லி, உ.பி, அரியானாவில் இன்று மிதமான நிலநடுக்கம்

தலைநகர் டெல்லி மற்றும்  சுற்றுவட்டாரத்தில் இன்று காலை   9.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 4.1ஆக  நிலநடுக்கம் பதிவானது. காலையில் பணிக்கும், கல்வி நிலையங்களுக்கும் சென்று  கொண்டிருந்தவர்கள் இந்த நில நடுக்கத்தை உணர்ந்து அலறினர்.  மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.   டெல்லியை ஒட்டி உள்ள  உ.பி மாநிலம்  நொய்டா, காசியாபாத்  ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.  அரியானாவின் எல்லைப்பகுதிகளிலும்  நிலநடுக்கத்தின்  தாக்கம் தெரிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.  அரியானாவின் குராவாரா பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம்  ஏற்பட்டதாக  புவியியல்  வல்லுநர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!