Skip to content

அசாமில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

அசாமின் உடலுகுரி பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 4.41 மணியளவில் ரிக்டர் அளவில் 5.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.78 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.33 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. அசாமில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

 

error: Content is protected !!