அதிமுக ஆட்சியில் உதய் மின்திட்டத்தில் கையெழுத்திடப்பட்டதால் ஆண்டுக்கு ஒருமுறை மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இது குறித்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இது குறித்து தமிழக மின்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்து உள்ளார். அதில், தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி கட்டணம் உயர்த்தப்பட்டாலும், வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்த்தக்கூடாது என முதல்வர் கூறி உள்ளார். எனவே வீடுகளுக்கு மின்கட்டணம் உயராது. அத்துடன் இலவச மின்சாரம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.