Skip to content

டிஜிபி ஜாபர் சேட் மீதான ED வழக்கு ரத்து.. உச்சநீதிமன்றம் அதிரடி

முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி மீது 2011 அதிமுக ஆட்சியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது 2020ல் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ரத்து செய்யப்பட்டதால் ED வழக்கையும் ரத்து செய்ய ஐகோர்ட்டில் ஜாபர் சேட் மனு தாக்கல் செய்தார்.

ஜாபர் சேட் மனுவை ஏற்று ED வழக்கை ரத்து செய்த ஐகோர்ட், பின்னர் மறுவிசாரணை நடத்துவதாக அறிவித்தது. சென்னை உயர்நீதிமன்ற முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜாபர் சேட் மேல்முறையீடு செய்தார். ஜாபர் சேட் மேல்முறையீட்டை ஏற்று ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் அபய் -எஸ்.ஒகா, உஜ்வால் புயான் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

error: Content is protected !!