Skip to content

தொழிலதிபர் அனில் அம்பானியிடம் ED விசாரணை

தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கிக் கடன் மோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,176 கோடி மதிப்புள்ள சொத்துகளை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது. ரூ.3,176 கோடி மதிப்புள்ள இல்லத்தை அமலாக்கத்துறை நேற்று முடக்கிய நிலையில் இன்று அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பிரபல தொழிலதிபரான அனில் அம்பானிக்கு சொந்தமான மும்பையில் உள்ள ரூ.3,700 கோடி மதிப்புள்ள 17 மாடிகள் கொண்ட ‘அபோட்’ எனும் ஆடம்பர குடியிருப்பை அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.

நம் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவர் தற்போதும் கொடிகட்டி பறக்கிறார். ஆனால் இவரது உடன் பிறந்த சகோதரர் அனில் அம்பானி பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்.

அனில் அம்பானி ரிலையன்ஸ் குரூப் தலைவராக இருந்தார். மேலும் ஏராளமான தொழில்களை செய்து வந்த நிலையில் நஷ்டம் அடைந்தார். அவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன. வங்கிகளில் பணம் வாங்கி அதனை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

அதாவது வங்கியில் கடன் வாங்கி அதனை பிற நிறுவனங்களுக்கு மாற்றி நிதி முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 2017 ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை யெஸ் வங்கியில் இருந்து பெறப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளார். அதனை அனில் அம்பானி பிற நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

அதோடு இதுபற்றி விஷயத்தை வெளியே சொல்லாமல் இருக்க யெஸ் வங்கியில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் உள்ளது. இதுபற்றியும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!