Skip to content

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்- அண்ணாமலை வாழ்த்து

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 71வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு  பல்வேறு கட்சித்தலைவர்கள், அதிமுக  முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து  தெரிவித்து வருகிறார்கள். தமிழக பாஜக முன்னாள் தலைவர்  அண்ணாமலை தனது  எக்ஸ் தளத்தில் , எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  அதில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும் அஇஅதிமுக பொதுச்செயலாளாருமான, அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்குஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும்  எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.   எடப்பாடி பிறந்தநாளையொட்டி அதிமுகவினர்  பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் ,அன்னதானம்,  ரத்ததானம் வழங்கினர்.
error: Content is protected !!