காமராஜரின் 123ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளமான எடப்பாடி பழனிச்சாமி காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அரியலூர் மாவட்டத்தில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற விளக்கத்தை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழக முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனியார் விடுதியில் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் அரியலூர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி விவசாயத்தை பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து வருகிறார். விவசாயிகள் கொள்ளிடம் ஆற்றில் கதவனையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும், சிறப்பு குருவை திட்டத்தை செயல்படுத்த வேண்டும், விவசாயிகள் வங்கி கடன் பெற சிபில் ஸ்கோர் திட்டத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த சிபில் ஸ்கோர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முந்திரிக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். அரியலூர் பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.