எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தின் மூலம் மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து, திமுக அரசை விமர்சித்து, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு மக்களைத் தயார்படுத்தி வருகிறார். அந்த வகையில், இன்று காலை கீழடி சென்ற அதிமுக
பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் செல்லூர் ராஜூ. இபிஎஸ்-ஐ வரவேற்ற பின்னர் அவரது காரில் ஏற முயன்ற செல்லூர் ராஜூவை தடுத்து நிறுத்திய காட்சிகள் வெளியானது.
அந்த வைரல் காணொளி காட்சிகளில் இந்த காரில் வேண்டாம், உங்கள் காரிலேயே வாருங்கள் என செல்லூர் ராஜூவிடம் கூறினார். செல்லூர் ராஜுவை எடப்பாடி கே. பழனிசாமி தனது காரில் ஏற விடாமல் தடுத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்லூர் ராஜு, அதிமுகவின் முக்கிய உறுப்பினராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர். இவர்களுக்கிடையேயான உறவு குறித்து கட்சி உள்ளேயோ அல்லது பொதுவெளியிலோ முன்பு எந்தவொரு பெரிய மோதலும் பொதுவாக பேசப்படவில்லை. இதற்கான விளக்கம் வெளியாகுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.