Skip to content

அதிமுக தனித்து ஆட்சி: அன்புமணிக்கு சுடச்சுட பதில்அளித்த எடப்பாடி

தமிழகத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆட்சியில் பங்கு தந்தால் தான் கூட்டணி என  அன்புமணி கூறியுள்ளாரே என கேட்டதற்கு பாமக தற்போது  அதிமுக கூட்டணியில் இல்லை.  பாமக  கூட்டணிக்கு வந்தாலும் வரலாம்.

அதிமுக கூட்டணி  தான் ஆட்சி  அமைக்கும்,   கூட்டணி ஆட்சி  அமைக்கும் என  அமித்ஷா  கூறவில்லை.   கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை.  நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன்  ஆட்சிக்கு வருவோம்.  கூட்டணி ஆட்சி கிடையாது.  நான் எடுப்பது தான் இறுதி முடிவு

நிபந்தனையின்றி ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்புக்கு தயார்  என்று    கூறியது பற்றி கேட்டபோது,   ஓபிஎஸ்சுக்கு  காலம் கடந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாமக தலைவர்  அன்புமணி இன்று காலை தான் ஆட்சியில் பங்கு வேண்டும் என்றார். அவர் கூறிய சில மணி நேரத்தில் எடப்பாடி  சுடச்சுட பதிலடி கொடுத்து விட்டார். அதோடு சேர்த்தே  கூட்டணி ஆட்சி தான் என தொடர்ந்து சொல்லி வரும்  அமித்ஷாவுக்கும் பதிலடி கொடுத்து விட்டார். அனி பாஜக என்ன எதிர்வினையாற்றப்போகிறது என்பதை பார்ப்போம்.  எடப்பாடி பேட்டியால் அவரது கூட்டணியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!