Skip to content

கல்வியாளர் முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் காலமானார்

தமிழ்நாட்டின் மூத்த கல்வியாளரும் ஆசிரியருமான முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு (பிப்.3) 11.54 மணிக்கு மருத்துவமனையில் காலமானார்.

கருணாநிதி முதல்வராக இருந்த போது சமச்சீர் கல்வி உருவாக்கிட அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக இருந்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கியவர்.

வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர்.அவரது மறைவு கல்வித்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.

error: Content is protected !!