Skip to content

அரியலூரில் பரபரப்பை கிளப்பிய முட்டை போஸ்டர்

கடந்த ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை என திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இன்று அரியலூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முட்டை என தலைப்பில் குறிப்பிட்டு அதன் கீழே முட்டை படத்தை அச்சிட்டு ‘பாஜக-அதிமுக ஒன்றிய

அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி’ எனும் வாசகங்களுடன் அரியலூரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அரியலூர்- திருச்சி சாலை, அரியலூர் – தஞ்சை சாலை மற்றும் பேருந்து நிலையம், கடைவீதி

உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

error: Content is protected !!