மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சில்லி (எ) சின்னசாமி (81). இவர், 8 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கருவேலமரங்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால், சிறுமி கூச்சலிட்டு அழுதுள்ளார். இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்போது அவர்களைப் பார்த்த சின்னசாமி, அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், போலீசார் போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சின்னசாமியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

