திருச்சி மேல சிந்தாமணி மாதுளங்கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். (69) இவருக்கு தீராத வயிற்று வலி மற்றும் கிட்னி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் தங்கவேல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி லட்சுமி புகாரின் அடிப்படையில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் தலைமையிலான போலீசார் தங்கவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மற்றொரு சம்பவத்தில் திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுண் அடைக்கல மாதா கோவில் தெருவை சேர்ந்த விஜய சங்கர் (52) என்பவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் . இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

