Skip to content

தடுமாறி கீழே விழுந்த முதியவர் சாவு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த முதியவர் முத்துராம். வேடச்சந்தூரில் உள்ள ஒரு பூக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வேலை முடிந்த பிறகு இரவு நேரங்களில் வேடச்சந்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் தங்கி இருந்துள்ளார்.
இவருக்கு மது அருந்து பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று மது அருந்திவிட்டு பயணிகள் நிழற்குடையின் கீழ் முத்துராம் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில், முத்துராமின் மூக்கில் அடிபட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இதில் மயக்கமடைந்த முத்துராம், சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், முத்துராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடச்சந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!