திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, அதே லாரி மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசல் ஆறாக ஓடியதால், கிராம மக்கள் கேன், குடம் உள்ளிட்டவற்றில் டீசலை நிரப்பிச் சென்றனர். இந்த விபத்தால் திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பானது. மூதாட்டி மீது லாரியை மோதாமல் இருக்க திருப்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மூதாட்டி மீது மோதி கவிழ்ந்தது. இதில் மூதாட்டி கனகாம்பரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசர் ஆறாக ஓடியதால், கிராம மக்கள் கேன், குடம் உள்ளிட்டவற்றில் டீசலை நிரப்பிச் சென்றனர். இந்த விபத்தால் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

