தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே மேலமாஞ்சேரி உடையார் தெருவில் வசித்து வருபவர் லோகாம்பாள் (70). இவருக்கு2 ஆண் பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும் இருந்து வருகின்றனர். அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்..
இந்நிலையில் லோகாம்பாள் தனது தெருவின் முனையில், இபி போஸ்ட் அருகே கருவேலம் குச்சிகளை வெட்டிக் கொண்டு இருந்தார்..
அப்போது நிலை தடுமாறி இபி போஸ்ட் மரத்தில் கட்டப்பட்டிருந்த ஸ்டேட் கம்பியில் கைபட்டது. அதில் ஏற்கனவே மின்சாரம் பாய்ந்து கொண்டு இருந்ததாக கூறப்படும் நிலையில், லோகாம்பாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்..
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கபிஸ்தலம் போலீசார் உயிரிழந்த லோகாம்பாளின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மேற்படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
மூதாட்டி லோகாம்பாள் உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

