2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வட்டாரக் கல்வி அலுவலர் சகுந்தலா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை (SST B2) குழுவினர் மொச்சகொட்டாம் பாளையம் எல்.ஜி.பி (LGP) செயின் ஃபேக்டரி அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த TN 47 U 9400 எண் கொண்ட இன்னோவா காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரை ஓட்டி வந்தவர் கரூர் பெரிய குளத்து பாளையம், பண்டரிநாதன் கோயில் தெருவைச் சேர்ந்த துரைமுருகன் என்பவர் அரவிந்த் ப்ளூ மெட்டல்ஸ் நிறுவனத்தின் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.அவரிடம் நடத்திய சோதனையில், காரில் ரூபாய் 6,27,850 ரொக்கப்பணம் இருந்தது கண்டறியப்பட்டது. இந்தப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லாத காரணத்தினால், பறக்கும் படை குழுவினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

