Skip to content

பீகாரில் நவம்பர் 6,11 ல் தேர்தல்…

  • by Authour

பீகார் சட்டப் பேரவை பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அந்த மாநில சட்டப் பேரவைக்கு தேர்தல் நடத்தும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், டில்லியில் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது…. பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதன் முழு விவரம் வருமாறு:

பீகார் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தி முடிக்கப்படும்.

பீகாரில் முதன்முறையாக கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 1, 2025 முதல் செப்டம்பர் வரை, உரிமைகோரல் மற்றும் ஆட்சேபனைகள் காலம் இருந்தது, அதற்கு போதுமான அவகாசம் வழங்கப்பட்டது. செப்டம்பர் 30 அன்று, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

பீகாரில் வாக்குப்பதிவை சிறப்பாக நடத்த மாநில் முழுவதும் 91,712 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 818 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நகர்ப்பகுதிகளில் 13,911 வாக்குச்சாவடிகளும், ஊரகப் பகுதிகளில் 78,801 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை 100% முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படும்.

243 தொகுதிகள் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.  பிகார் தேர்தல் அமைதியாக , வௌிப்படை தன்மையுடன் நடத்தப்படும். 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 6 ,  11ல் பிகார் தேர்தல். வேட்பு மனு தாக்கல் தொடக்கம். அக். 10 ம் தேதி,  வேட்பு மனு தாக்கல் கடைசி நாள். அக். 17ம் தேதி, வேட்பு மனு பரிசீலனை அக். 18ம் தேதி, வேட்பு மனு திரும்பப்பெற அக். 20ம் தேதி, நவம்பர் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

error: Content is protected !!