மாங்காய்க்காக சுவர் ஏறி குதித்த யானை.. படங்கள்

453
 சாம்பியாவில் மாங்காய் சாப்பிடுவதற்காக, அங்குள்ள ஒரு தங்கும் விடுதியின் சுவரை தாண்டி யானை சென்றது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  சாம்பியா நாட்டின் தெற்கு லுங்வா தேசிய பூங்கா பகுதியில்  எம்ஃபுவே என்னும் தங்கும் விடுதி.
சம்பவத்தன்று ஆப்பிரிக்க யானை ஒன்று விடுதியின் சுவரை தாண்டி உள்ளே வந்தது. இதைக்கண்ட அங்கிருந்த சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த யானை கீழே தடுமாறி விழாமல் தனது மிகப்பெரிய 4 கால்களையும் ஒவ்வொன்றாக எடுத்து வைத்து சுவரை தாண்டியது. இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. 
 

LEAVE A REPLY