Skip to content

எல்கை பந்தயம்.. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கிய VSB

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட திமுக சார்பில் பாரம்பரிய குதிரை வண்டி எல்கை பந்தயம் சிறப்பாக நடத்தப்பட்டன.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 73- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் காலை நேரத்தில் மாட்டுவண்டி போட்டிகள் நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து

நேற்று மாலை கரூர் வாங்கல் சாலையில் உள்ள அரசு காலணி பகுதியில் குதிரை வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியை கரூர் மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற

உறுப்பினருமான செந்தில் பாலாஜி அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கொடி அசைக்கப்பட்டவுடன் குதிரைகள் வேகமாக பாய்ந்து சென்றது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்தப் போட்டி பெரிய குதிரை, சிறிய குதிரை மற்றும் புதிய குதிரை என

மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

பெரிய குதிரை பிரிவில் முதலிடம் பெற்றவருக்கு ரூ.40,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.30,000, மூன்றாம் இடத்திற்கு ரூ.20,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

சிறிய குதிரை பிரிவில் முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ.20,000, மூன்றாம் பரிசாக ரூ.15,000 வழங்கப்பட்டது.

புதிய குதிரை பிரிவில் முதலிடத்திற்கு ரூ.20,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.10,000, மூன்றாம் இடத்திற்கு ரூ.7,000 மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டிகளை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். வெற்றி பெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி அவர்கள் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

error: Content is protected !!