அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, X வலைதளத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார் எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற பெரும் பங்காற்றியவர் எலான் மஸ்க். தேர்தலில் தமக்காக பரப்புரை செய்த எலான் மஸ்கிற்கு நிர்வாகத்தில் பதவியை தந்தார் ட்ரம்ப். ட்ரம்ப் அளித்த பதவியில் பணியாற்ற 130 நாட்கள் மஸ்க் ஒப்புக்கொண்டிருந்தார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். சிறப்பு அரசாங்க ஊழியர் என்ற எனது பணிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. தேவையற்ற செலவினங்களை குறைக்கும் பணியில் ஈடுபட வாய்ப்பளித்த ட்ரம்பிற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.