Skip to content

சத்தீஸ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் திடீரெனத் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பாதுகாப்புப் படையினர் அளித்த தகுந்த பதிலடியில், இரண்டு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பஸ்தார் சரக ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறுகையில், “கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கி, 9 மி.மீ. ரக பிஸ்டல் மற்றும் சில முக்கியப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் இன்னும் நக்சலைட்டுகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே பிஜாப்பூர் மாவட்டத்தின் கர்ரேகுட்டா மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் நடத்திய சக்திவாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 11 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்றைய என்கவுன்ட்டர் நக்சலைட்டுகளுக்குக் கொடுக்கப்பட்ட பெரும் அடியாகக் கருதப்படுகிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதியும் இதே பஸ்தார் சரகத்தில் நடந்த மோதலில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!