தென் கைலாயம் என்று பக்தர்களால் போற்றப்படும் பழமை வாய்ந்த கோவை, பூண்டி அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உப கோவில்கள் உள்ளன. இந்நிலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலின் உபகோவிலான மாதம்பட்டி கிராமத்தில் அருள்மிகு அன்னபூரணி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமாக மாதம்பட்டி கிராமத்தில் 11 ஏக்கர் நிலம் உள்ளது. அதனை பல்வேறு நபர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் கோவை குற்றவியல் இரண்டாவது நீதிமன்றத்தில் வழக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கோயிலுக்கு சொந்தமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க தீர்ப்பு வழங்கி உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து இன்று ஆக்கிரமிக்கப்பட்ட ரூபாய் 55 கோடி மதிப்புடைய 11 ஏக்கர் நிலத்தை ஜே.சி.பி எந்திரத்தைக் கொண்டு காவல் துறையினர் உதவியுடன் அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
கோவையில் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு…
- by Authour
