Skip to content

குன்னூர் சாலையில் ஆக்கிரமிப்பு… செல்ல வழியின்றி திக்கு முக்காடும் காட்டுயானைகள்

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட குன்னூர் சாலையில் ஓடந்துறை பகுதியில் யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு செல்வதற்காக சாலையை கடந்து செல்வது காலம் காலமாக நடந்து வருகிறது

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் ஓடந்துறை பகுதியில் கல்லார் வரை அதிக அளவில் கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

புதிது புதிதாக நாளுக்கு நாள் கட்டிட விரிவாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு செல்லக்கூடிய காட்டு யானைகளின் வலசை பாதை அடைக்கப்பட்டு வருகிறது

இதனால் காட்டு யானைகள் செல்லும் பாதை தெரியாமல் புதிதாக ஏற்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய கட்டிடங்களுக்குள் புகுந்து அங்கும் இங்குமாக வழி தேடி திக்கு முக்காடும் நிலை ஏற்பட்டுள்ளது

இதன் வெளிப்பாடாக இன்று அதிகாலை மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் உள்ள கல்லார் பகுதியில் கல்லார் வனப்பகுதியில் இருந்து நெல்லி மலைப் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் கல்லார் வனத்திற்கு திரும்ப வந்த காட்டு யானை பாகுபலி அங்கு புதிதாக அமைக்கப்படும் காம்பவுண்ட் சுவர் இருக்குள் புகுந்து வந்தது

ஏற்கனவே இந்த யானை பயன்படுத்தி வந்த வழித்தடங்கள் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டு வருவதால் வழி தெரியாமல் அங்கிருந்துமாக பாகுபலி யானை அலைந்து வருவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது

அனுமதி இன்றி குன்னூர் சாலையில் கட்டிட விரிவாக்கம் புதிய கட்டிடங்கள் என தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் யானைகள் வழித்தடங்கள் மறைக்கப்பட்டு ஊருக்குள் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது

error: Content is protected !!