Skip to content

விரைவில் சென்னை வருகிறார் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்

அமலாக்கத்துறை தலைமை இயக்குநர் ராகுல் நவீன் சென்னை வரவுள்ளார். தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்குகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

4 முதல் 5 ஆண்டுகளுக்கு மேலாக வழக்குகள் இருப்பதாக கூறி இந்த நிதியாண்டில் 500 வழக்குகள் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை மற்றும் நீதி விசாரணையை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக முக்கிய வழக்குகளை உடனடியாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் 2 நாட்களுக்கு முன்பு கவுகாத்தியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர் ராகுல் நவீன் தெரிவித்திருந்தார்.

error: Content is protected !!