Skip to content

நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

  • by Authour

நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமான சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்.08) காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திலும் 6 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை அபிராமிபுரத்தில் நடிகர் துல்கர் சல்மானின் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு இன்று காலை 2 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சட்ட விரோதமாக பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்த புகாரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

error: Content is protected !!