இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஆஸ்திரேலியா அசத்தல். 4வது இன்னிங்ஸில் 123 ரன்கள் குவித்த டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தார்.
14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியை வெல்லாத இங்கிலாந்தின் மோசமான நிலை தொடர்கிறது. முதல் ஆஷஸ் டெஸ்ட்டில் 69 பந்தில் சதம் விளாசினார் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட். இதன்மூலம் டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்ஸில் சேஸிங்கின்போது அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

